தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சி மலரும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேச்சு

தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சி மலரும் என்று தியாகதுருகத்தில் நடந்த ஒன்றிய, நகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2017-10-06 23:15 GMT

தியாகதுருகம்,

தியாகதுருகம் ஒன்றிய, நகர தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தியாகதுருகத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தியாகதுருகம் நகர செயலாளர் பொன்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் திம்மலை நெடுஞ்செழியன், அவைத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மவுண்ட் பார்க் பள்ளி தாளாளரும் தி.மு.க. பிரமுகருமான மணிமாறன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தியாகதுருகம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு, கழக உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தொடர்ந்து தற்போது மர்ம காய்ச்சலால் மக்கள் அவதிப்படுகின்றனர். தற்போதைய அரசின் செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் விரைவில் தி.மு.க. ஆட்சி மலரும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஒன்றிய துணை செயலாளர்கள் அண்ணாதுரை, கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் மலையரசன், நெடுஞ்செழியன், மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் முரசொலிமாறன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அப்துல்கபூர், பொருளாளர் சுப்பு இளங்கோவன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பெருமாள், நிர்வாகிகள் மூர்த்தி, சசிகுமார், சிலம்பரசன் மற்றும் அனைத்து பிரிவு நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்