முறுக்கேரி கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த முறுக்கேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.;

Update: 2017-10-06 22:30 GMT

வந்தவாசி,

வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த முறுக்கேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலையில் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வந்தவாசி – மேல்மருவத்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ச.பாரி, எஸ்.தமிழ்ச்செல்வி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக வந்தவாசி – மேல்மருவத்தூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்