வருமான வரித்துறை அதிகாரிகள் வீடுகளில் ஊழல் தடுப்பு படை மூலம் சோதனை நடத்த மாநில அரசு திட்டம்
கர்நாடகத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் வீடுகளில் ஊழல் தடுப்பு படை போலீசார் மூலம் சோதனை நடத்த மாநில அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் வீடுகளில் ஊழல் தடுப்பு படை போலீசார் மூலம் சோதனை நடத்த மாநில அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதனை போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி மறுத்துள்ளார்.
கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையாவின் மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள டி.கே.சிவக்குமார், ரமேஷ் ஜார்கிகோளியின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதுதவிர கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதனால் காங்கிரஸ் தலைவர்களை குறி வைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாக ஏற்கனவே முதல்-மந்திரி சித்தராமையா குற்றம்சாட்டி இருந்தார். மேலும் வருமான வரித்துறையினரை மத்திய பா.ஜனதா அரசு தவறாக பயன்படுத்தி வருவதாகவும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள்.
இந்த நிலையில், கர்நாடகத்தில் உள்ள ஊழல் தடுப்பு படை மூலம் பா.ஜனதா தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்த மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதுபோன்ற சோதனை எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும் கர்நாடகத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளின் வீடுகளில் ஊழல் தடுப்பு படை போலீசார் மூலம் சோதனை நடத்த மாநில அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், இதன்மூலம் அந்த அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, மாநில போலீஸ் டி.ஜி.பி. ஆர்.கே.தத்தாவுக்கு, வருமான வரித்துறை இயக்குனர் பாலகிருஷ்ணா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “கர்நாடகத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்த ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு அதிகாரம் இல்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் தவறு செய்தால், அதுபற்றி சி.பி.ஐ.யிடம் புகார் அளிக்கலாம். அதற்காக ஊழல் தடுப்பு படை மூலம் சோதனை நடத்த திட்டமிடுவது தவறானது“ என்று கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டியிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளின் வீடுகளில் ஊழல் தடுப்பு படை போலீசார் மூலம் சோதனை நடத்த மாநில அரசு திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல. அதுபோன்று தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. மாநில அரசுக்கு பழிவாங்கும் எண்ணம் கிடையாது. ஊழல் தடுப்பு படையை மாநில அரசு ஒரு போதும் தவறாக பயன்படுத்தியதும் இல்லை.
எடியூரப்பா மீது ஊழல் தடுப்பு படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்த வேண்டும் என்ற எண்ணம் மாநில அரசுக்கு இல்லை. ஊழல் தடுப்பு படை போலீசார் தங்களது அதிகார வரம்பை மீறி ஒரு போதும் செயல்படமாட்டார்கள்.
இவ்வாறு மந்திரி ராமலிங்க ரெட்டி கூறினார்.