கலெக்டர் தலைமையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
தேனியில் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
தேனி,
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் மற்றும் ஏடிஸ் கொசு ஒழிப்பு தினம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். கலெக்டர் தலைமையில், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர், மாணவ, மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கசாயத்தை கலெக்டர் வழங்கினார். முகாமில் கலெக்டர் வெங்கடாசலம் பேசும் போது கூறியதாவது:-
மாணவ, மாணவிகள் டெங்கு காய்ச்சலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மழைக் காலங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக இருக்கும் என்பதால், வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டி, குடம், டிரம்களில் கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரிகள், பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல், தலைவலி, கை, கால், மூட்டுகளில் வலி, கண்களின் பின்புறம் வலி மற்றும் தோலில் சிறு, சிறு சிகப்பு தடிப்புகள் போன்றவை டெங்கு காய்ச்சலின் அறிகுறியாகும். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருநாவுக்கரசு, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) செல்வராஜ், சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் சண்முகசுந்தரம், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகுணா மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.