கமுதி அருகே துணிகரம் கோவில் கோபுரத்தை சேதப்படுத்தி ஐம்பொன் கலசங்கள் திருட்டு
கமுதி அருகே கோவில் கோபுரத்தை சேதப்படுத்தி ஐம்பொன் கலசங்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே எம்.புதுக்குளத்தில் முனீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோபுரத்தின் மீது ரூ.1½ லட்சம் மதிப்பிலான 3 ஐம்பொன் கலசங்கள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் மர்ம நபர்கள் இந்த கோவில் கோபுரத்தை சேதப்படுத்தி அதில் இருந்த 3 ஐம்பொன் கலசங்களையும் திருடிச்சென்று விட்டனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த புதுக்குளம் கிராம மக்கள் கமுதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதனை தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் கமுதி இன்ஸ்பெக்டர் சக்கரபாணி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்லம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.