கொலை வழக்கில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கோவை அம்மன்குளத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது36). இவர் மீது திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த 1.8.2017 அன்று ராமநாதபுரம் அருகே சங்கனூர் கால்வாய் பகுதியில் சாக்கடை ஓடையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
கோவை,
இவரது உடல் துண்டு,துண்டாக வெட்டப்பட்டு சாக்குமூட்டைக்குள் கட்டி வீசப்பட்டு கிடந்தது. போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
திருட்டு கும்பலுக்கு இடை யே நடந்த மோதலில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருடிய பணத்தை பங்குவைப்பதில் ஏற்பட்ட தகராறில் போலீசாரிடம் காட்டி கொடுத்துவிடுவேன் என நாகராஜ் கூறியதால் ஆத்திரத்தில் வெட்டிக்கொன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இந்த வழக்கில் கைதான கோவை திருச்சிரோடு ஹைவேஸ் காலனியை சேர்ந்த ரமேஷ்(24), அம்மன்குளத்தை சேர்ந்த வினோத்(22), கணபதியை சேர்ந்த சிவா என்ற விஷ்ணு(30) ஆகியோர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.
தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்தததால் 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ரமேஷ், வினோத், சிவா ஆகிய 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இதற்கான நகல், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.