நிலப்பிரச்சினையில் பெண்ணை தாக்கியவர் கைது 11 பேர் மீது வழக்குப்பதிவு

விக்கிரமங்கலம்,
விக்கிரமங்கலம் அருகே தெற்கு நரியங்குழி கிரமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 48). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜாங்கம் (54) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஜெயலட்சுமி அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜாங்கம், தகாத வார்த்தையால் திட்டி ஜெயலட்சுமியை தாக்கியுள்ளார். இதையடுத்து இருதரப்பு உறவினர்களும் ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் படுகாயமடைந்த ஜெயலட்சுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ராஜாங்கம், அவரது உறவினர்கள் நீலமேகம், பாப்பாத்தி, செல்வமணி ஆகிய 4 பேர் மீதும், ராஜாங்கம் கொடுத்த புகாரின் பேரில் ஜெயலட்சுமி, அவரது கணவர் பெரியசாமி, உறவினர்கள் பாண்டியன், மகாதேவன் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ராஜாங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.