தொடர் மழையால் ஒகேனக்கல் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு
தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் சின்னாற்றிற்கு தண்ணீர் வரும் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து கடும் வறட்சி நிலவியது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள கிணறுகள், ஏரிகள், நீர்நிலைகள் வறண்டது. மேலும் சின்னாற்றில் முட்புதர்கள் முளைத்து புதர் மண்டி காணப்பட்டது. இதனால் சின்னாற்றை தூர்வாரி முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பாலக்கோடு மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சின்னாற்றிற்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக 5 ஆண்டுகளுக்கு பிறகு சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சின்னாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஒகேனக்கல் மீன் மார்க்கெட் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. வறண்டு கிடந்த சின்னாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.