பொறியியல் கல்லூரிகளில் படித்து வரும் ஆதிதிராவிடர்-பழங்குடி இன மாணவ, மாணவிகள் போராட்டம்

பொறியியல் கல்லூரிகளில் தமிழக அரசின் கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டதை கண்டித்து திருச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-10-05 23:00 GMT
திருச்சி,

அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தின் மாநில அமைப்பாளர்கள் பரதன், சந்திரமோகன், செல்வகுமார் தலைமையில் நேற்று பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் திரண்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். இவர்கள் திருச்சி பகுதியில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் படித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவ, மாணவிகள் ஆவார்கள்.

பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவ, மாணவிகளுக்கு வருடத்திற்கு ரூ.85 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த தமிழக அரசின் கல்வி உதவித்தொகை ரூ.35 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதை கண்டித்தும், அதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து விட்டு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த தொகையை குறைக் காமல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங் களும் எழுப்பினார்கள்.

பின்னர் அவர்களது பிரதிநிதிகள் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று கலெக்டரின் உதவியாளரிடம் மனு கொடுத்தனர். முன்னதாக பழைய கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு சென்ற மாணவர்கள் அங்குள்ள தபால் நிலையத்தில் தமிழக முதல்-அமைச்சர், தலைமை செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ஆகியோருக்கு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தபால் மூலம் அனுப்பினார்கள். 

மேலும் செய்திகள்