சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சாலையில் மிரண்டு ஓடிய குதிரையால் பரபரப்பு

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சாலையில் மிரண்டு ஓடிய குதிரையால் பரபரப்பு ஏற்பட்டது. மிரண்டு ஓடிய குதிரை சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த 2 சிறுவர்கள், தங்களது குதிரைக்கு உடல்நலம் குறைவு ஏற்பட்டதால் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு ஓட்டி

Update: 2017-10-05 22:30 GMT

சேலம்,

சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த 2 சிறுவர்கள், தங்களது குதிரைக்கு உடல்நலம் குறைவு ஏற்பட்டதால் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு ஓட்டி வந்தனர். அங்கு குதிரைக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஊசி போடப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து செல்வதற்காக அந்த குதிரையை வண்டியில் பூட்டினர். பின்னர் குதிரை வண்டியில் ஏறி உட்கார்ந்தனர்.

அப்போது திடீரென குதிரை மிரண்டு ஓட்டம் பிடித்தது. இந்த குதிரை கலெக்டர் அலுவலகம் வழியாக வேகமாக ஓடியது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேலும் கடிவாளத்தை பிடித்து குதிரையை நிறுத்த சிறுவர்கள் போராடினர். அப்போது அந்த சிறுவர்கள் கூச்சலிட்டனர்.

மாநகராட்சி அலுவலகம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த தனியார் பஸ் ஒன்று குதிரை வண்டியின் சக்கரம் மீது லேசாக உரசியது. இதையடுத்து வண்டி சாய்ந்ததால் 2 சிறுவர்களும் கீழே விழுந்தனர். குதிரையும் கீழே விழுந்தது. இதை பார்த்ததும் அந்த வழியாக வந்தவர்கள் சிறுவர்களையும், குதிரையும் மீட்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த சிறுவர்கள் குதிரையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்தும் சேலம் டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சாலையில் குதிரை மிரண்டு வேகமாக ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்