திருத்தணியில் மின்னல் தாக்கி வாலிபர் பலி
திருத்தணி அருகே உள்ள தரணிவராகபுரத்தை (பந்திகுப்பம்) சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் சிவா(வயது 24). இவர், சொந்தமாக துளைபோடும் எந்திரம் வைத்து கட்டிடங்களை இடிக்கும் பணி செய்து வந்தார்.
திருத்தணி,
நேற்று மதியம் திருத்தணியில் அரக்கோணம் சாலையில் ஜே.ஜே. நகரில் உள்ள ஒரு வீட்டின் மேல் தளத்தை துளைபோடும் எந்திரம் மூலம் இடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அந்த பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. திடீரென சிவாவை மின்னல் தாக்கியது. இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார், சிவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.