நரேந்திர தபோல்கர் கொலை கைதியின் ஜாமீன் மனு தள்ளுபடி

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலை கைதியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து புனே கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2017-10-05 23:00 GMT

புனே,

புனேயை சேர்ந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கடந்த 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20–ந் தேதி அங்குள்ள மேம்பாலம் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார்சைக்கிளில் வந்த மர்மஆசாமிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.

மூடநம்பிக்கையை எதிர்த்து போராடிய நரேந்திர தபோல்கர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு விசாரணை 2014–ம் ஆண்டு மே மாதம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு சி.பி.ஐ. போலீசார் இந்த கொலையில் தொடர்புடைய வீரேந்திர சிங் தாவ்டே என்பவரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11–ந் தேதி கைது செய்தனர்.

இந்த நிலையில், வீரேந்திர சிங் தாவ்டே ஜாமீன் கேட்டு புனே செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.

அப்போது அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்