நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை’ தந்தை என்று கூறி வரும் கதிரேசன் போலீசில் புகார்
மதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று, அவருடைய தந்தை என்று கூறி வரும் கதிரேசன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மதுரை,
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மனைவி மீனாட்சி.
இந்த தம்பதியினர், நடிகர் தனுஷை தங்களுடைய மூத்த மகன் என்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.
தங்களுக்கு வயதாகி விட்டதால் மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ.65 ஆயிரம் தனுஷ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கதிரேசன் சமீபத்தில் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் ஆஜராகி நீதிபதிகள் முன்னிலையில் விளக்கம் அளித்தார்.
இறுதியில் மேலூர் கோர்ட்டில் தனுஷ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து கடந்த ஏப்ரல் மாதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
முன்னதாக அந்த வழக்கு விசாரணையின்போது, தனுஷ் தாக்கல் செய்த பள்ளிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவை போலியானவை என்றும், அவர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து ஐகோர்ட்டை தவறாக வழிநடத்தி விட்டார் என்றும் கதிரேசன் மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் புகார் மனு அனுப்பினார்.
அந்த புகார் மனு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கதிரேசன் நேற்று காலை மதுரை புதூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கு ஜீவனாம்சம் கேட்டு மேலூர் நீதிமன்றத்தில் தனுஷ் மீது வழக்கு தாக்கல் செய்தேன். இந்த வழக்கை ரத்து செய்வதற்காக மதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் எதிர்மனுதாக்கல் செய்தார். அந்த மனு விசாரணையின் போது எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் தகப்பனார் கிருஷ்ணமூர்த்தி, தாயார் விஜயலட்சுமி ஆகியோருக்கு பிறந்ததாக பதிவு எண் இல்லாத சென்னை மாநகராட்சி வழங்கிய பிறப்புச் சான்றிதழை தாக்கல் செய்தனர். அவர்கள் பிறப்பு சான்றிதழ் வழங்கிய தேதியன்று மருத்துவமனையில் கிருஷ்ணமூர்த்தி-விஜயலட்சுமி தம்பதிக்கு குழந்தை பிறந்ததாக பதிவு இல்லை. அதே போன்று சென்னை மாநகராட்சி பதிவேட்டிலும் குழந்தை பிறந்ததற்கான எவ்வித பதிவும் இல்லை. ஆகவே இது போலிச் சான்றிதழ் என்பது தெரியவருகிறது.
மேலும் அந்த வழக்கில் ஆர்.கே.வெங்கடேச பிரபு, தகப்பனார் பெயர் கே.கிருஷ்ணமூர்த்தி ஆதிதிராவிடர் சமுதாயத்தை சார்ந்தவர் என்றும் பள்ளிச்சான்றிதழ் தாக்கல் செய்துள்ளனர். அதுவும் போலி சான்றிதழ் என்பது தெரியவந்துள்ளது. அதே போன்று தனுஷ் பிறந்த தேதி பற்றியும் தவறுதலான தகவல் கொடுத்து ஆதார் அட்டை பெற்றுள்ளனர். மேலும் 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டதாக ஒரு போலி குடும்ப அட்டை தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இவை அனைத்தும் போலி சான்றிதழ்கள்.
எனவே தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்களை பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் எவ்வித பதிலும் தெரிவிக்காமல் கதிரேசனை அனுப்பி வைத்து விட்டார்.
இதுபற்றி கதிரேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, கோர்ட்டில் தாக்கல் செய்த அனைத்து ஆவணங் களும் போலி என்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு பதிவாளருக்கு தபால் மூலம் புகார் அனுப்பினோம். அவர் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இதனை போலீசார் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் புதூர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளோம். அவர்கள் மனுவை வாங்கிக் கொண்டு, போலீஸ் கமிஷனரை சந்தித்து தெரிவிக்கும்படி கூறினார்கள். எனவே கமிஷனரை சந்தித்து புகார் தெரிவிக்க உள்ளோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார்.