மின்சார ரெயிலில் பயணிகளிடம் செல்போன் திருடியவர் பிடிபட்டார்

மின்சார ரெயிலில் பயணிகளிடம் செல்போன் திருடியவர் கையும், களவுமாக பிடிபட்டார். அவர் 10 நிமிடத்தில் 5 பேரிடம் செல்போன்களை திருடியது தெரியவந்தது.

Update: 2017-10-05 22:45 GMT

மும்பை,

மும்பை துறைமுக வழித்தடத்தில் உள்ள செம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து குர்லாவிற்கு சம்பவத்தன்று இரவு துர்கா பிரசாத்சிங் என்பவர் மின்சார ரெயிலில் பயணம் செய்தார். அந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒருவர் துர்கா பிரசாத்சிங் பேண்டு பைக்குகள் கையை விட்டு அவரது செல்போனை திருடினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த துர்கா பிரசாத்சிங் அந்த ஆசாமியை கையும், களவுமாக பிடித்தார். தான் செல்போனை திருடவில்லை என அந்த ஆசாமி வாக்குவாதம் செய்தார்.

ரெயில் குர்லா வந்ததும் தகவல் அறிந்து வந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஒருவர் அந்த ஆசாமியை சோதனையிட்டார். இதில் அவரிடம் 3 செல்போன்கள் இருந்தன. அவை திருட்டு செல்போன்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆசாமி ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவரிடம் இருந்த திருட்டு செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் செய்யது ஹஸ்னுதின் (வயது45) என்பது தெரியவந்தது.

அதே மின்சார ரெயிலில் 10 நிமிடத்திற்குள் 5 பேரிடம் அவர் செல்போன்களை திருடியிருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. 2 செல்போன்களை ரெயிலில் தன்னுடன் வந்த கூட்டாளிகளிடம் கொடுத்து விட்டதாக அவர் தெரிவித்தார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்