டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி மாணவர்கள் மனித சங்கிலி
சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் அம்பத்தூர்–ரெட்ஹில்ஸ் சாலையில் டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்கள் மனித சங்கிலியாக நின்றனர்.
அம்பத்தூர்,
இதில் அம்பத்தூர் தனியார் பள்ளி மாணவர்கள் 600 பேர் கலந்து கொண்டனர். இதனை அம்பத்தூர் மண்டல துணை ஆணையாளர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
முன்னதாக அம்பத்தூர் தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் அம்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி வடக்கு பூங்கா தெரு, மண்ணூர் ட்ரெங்க்ரோடு, ஒரகடம், பகுதிகளில் நடைபெற்றது.
அப்போது பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.