அரசு கேபிள் டி.வி. சந்தாதாரர்கள் இலவச செட்டாப் பாக்ஸ் பொருத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம்
அரசு கேபிள் டி.வி. நிறுவன சந்தாதாரர்கள் இலவச செட்டாப் பாக்ஸ் பொருத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
அரசு கேபிள் டி.வி. நிறுவன சந்தாதாரர்கள் இலவச செட்டாப் பாக்ஸ் பொருத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
செட்டாப் பாக்ஸ்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ்களை வழங்கி, டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை தொடங்கப்பட்டு உள்ளது. மாவட்டத்திற்கு, முதல்கட்டமாக 32 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் பெறப்பட்டு, உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க வேண்டும்.
புகார்
இந்த செட்டாப் பாக்ஸ்களை சந்தாதாரர்களின் இடத்தில் பொருத்தி, செயலாக்கம் செய்வதற்கு ஒருமுறை மட்டும் ரூ.200 பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் சந்தாதாரர்கள் ரூ.200–க்கு மேல் கூடுதலாக தொகை ஏதும் செலுத்த தேவை இல்லை. கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டால், அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800 425 2911–க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.