தூத்துக்குடியில், வீடுபுகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தங்க நகை– செல்போன் கொள்ளை

தூத்துக்குடியில், வீடுபுகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தங்க நகை மற்றும் செல்போனை கொள்ளை அடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.;

Update: 2017-10-05 20:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், வீடுபுகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தங்க நகை மற்றும் செல்போனை கொள்ளை அடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கூலிதொழிலாளி

தூத்துக்குடி தாளமுத்து நகர் சிலுவைப்பட்டியை சேர்ந்தவர் ஜூடு அந்தோணி தாமஸ். இவருடைய மனைவி மரிய அந்தோணி மேபில் (வயது 39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஜூடு அந்தோணி தாமஸ் கூலி வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலையில் கணவர் வேலைக்கு சென்ற பின், மகள்கள் 2 பேரையும் பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு, மரிய அந்தோணி மேபில் வீட்டில் தனியாக இருந்தார்.

கட்டிப்போட்டு...

அப்போது மர்ம மனிதர்கள் 4 பேர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களில் ஒருவர், மரிய அந்தோணி மேபிலை கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து அங்கு கிடந்த துணியை எடுத்து மரிய அந்தோணி மேபிலின் முகத்தை மூடி அவரின் கைகளை கட்டி போட்டுள்ளனர்.

பின்னர் பீரோவில் இருந்த 1 பவுன் எடையுள்ள ஒரு ஜோடி கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு மற்றும் செல்போனை கொள்ளை அடித்துக்கொண்டு 4 பேரும் தப்பி சென்று விட்டனர்.

வலைவீச்சு

இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்ம மனிதர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்