கோவில்பட்டியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

கோவில்பட்டி பஸ் நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டது.

Update: 2017-10-05 21:30 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டி பஸ் நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டது.

பஸ் நிலையம்

கோவில்பட்டி நகரசபை மற்றும் அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவ பிரிவு சார்பில், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது. நகரசபை ஆணையாளர் அச்சையா தலைமை தாங்கினார். சித்த மருத்துவர்கள் மீனாட்சிசுந்தரம் தமிழ் அமுதன், செந்தில்செல்வி, வானுமாமலை, சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், சுரேஷ் ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

பள்ளிக்கூடம்

இதேபோன்று கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகள் தங்களது வீடுகளின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தியாகாதவாறும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. நகரசபை ஆணையாளர் அச்சையா, பள்ளிக்கூட முதல்வர் தயா, பூச்சியியல் வல்லுனர் கிருபா, உதவி அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் யமுனா தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, தலைமை ஆசிரியர் முனியசாமி, சுகாதார ஆய்வாளர்கள் செண்பகமூர்த்தி, சண்முகநாதன், சண்முகசுந்தரம், முடநீக்கியல் வல்லுனர் மதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்போம், டெங்குவை ஒழிப்போம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

மேலும் செய்திகள்