நெல்லை கோர்ட்டில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் முதன்மை நீதிபதி ராஜசேகர் தொடங்கி வைத்தார்

நெல்லை கோர்ட்டில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தொடங்கி வைத்தார்.

Update: 2017-10-05 21:00 GMT

நெல்லை,

நெல்லை கோர்ட்டில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு முகாம்

நெல்லை மாநகராட்சி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவை இணைந்து பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை கோர்ட்டில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை நேற்று நடத்தின. நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜேசேகர் தலைமை தாங்கி, டெங்கு விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, “தமிழக அரசின் ஆணைக்கு இணங்க மாவட்ட நிர்வாகமும், நெல்லை மாநகராட்சி நிர்வாகமும் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை நடத்தி வருகிறது. அதன்படி நெல்லை கோர்ட்டிலும் டெங்கு விழிப்புணர்வு முகாம் 3 நாட்கள் நடத்தப்படும். கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் நிலவேம்பு குடிநீரை பருக வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்“ என்றார்.

நீதிபதிகள்

நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகராட்சி என்ஜினீயர் நாராயண நாயர் முன்னிலை வகித்தார். சித்த மருத்துவர் அருண்மதி, டெங்கு நோய் வராமல் தடுப்பது குறித்து பேசினார்.

நெல்லை மாவட்ட நீதிபதி அப்துல்காதர், தொழிலாளர் நீதிபதி கருப்பையா, மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜசேகரன், சட்ட உதவி மைய நீதிபதி ராமலிங்கம், நீதிபதி சந்திரா மற்றும் வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்