மினி செவ்வாய் கிரகம்
துபாயில் செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பில் ஒரு மாதிரி உலகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது துபாயின் மையப் பகுதியான பாலைவனத்தில் உருவாக்கப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சூழ்நிலையை அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த செயற்கை செவ்வாய் நகரம் அதற்கான பயிற்சி கூடமாக கட்டமைக்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கையில் தற்போது ஐக்கிய அமீரக நாடுகள் களம் இறங்கியுள்ளது. இதற்காக 19 லட்சம் சதுர அடி பரப்பளவில் ராட்சத கூண்டு அமைக்கப் படுகிறது. ரூ.879 கோடி செலவில் உருவாகும், இந்த செயற்கை நகரத்தில் தான் செவ்வாய் கிரகத்தில் குடியேற இருப்பவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறதாம்.