காவிரி கிளை வாய்க்கால்களில் ரூ.7 கோடியில் புதிய பாலம் கட்டப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மாயனூர் அருகே காவிரி கிளை வாய்க்கால்களில் ரூ.7 கோடியில் புதிய பாலம் கட்டப்படும் என எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
கரூர்,
கரூர் மாவட்டம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மாயனூர் கதவணைக்கு செல்லும் வழியில் உள்ள கால்வாய்களின் மேல் புதிய பாலங்கள் கட்டப்படும். கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய இருவழிச்சாலை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி கரையின் வலது கரைக்கு பின்புறம் தென்கரை கால்வாய், கிருஷ்ணராயபுரம் கால்வாய், புதுக்கட்டளை மேட்டு வாய்க்கால் ஆகிய மூன்று பாசன கிளை வாய்க் கால்கள் உள்ளன. அவற்றின் குறுக்கே தற்போது மதகுகளுடன் கூடிய ஒரு பழைய ஒருவழிப்பாதை பாலம் உள்ளது. இது போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, இந்தப் பழைய பாலத்துக்கு அருகிலேயே ஒரு புதிய இருவழிப்பாதையுடன் கூடிய 80 மீட்டர் நீளமுள்ள பாலம் சுமார் ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்படும்.
சின்னதாராபுரம் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் கூடலூர் மேல்பாகம் ஊராட்சி, பெரியதிருமங்கலம் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை அமைக்க கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.
தாந்தோன்றிமலை ஒன்றியத்தில் 14 ஊராட்சிகளை சேர்ந்த 274 ஊரக குடியிருப்புகளில் உள்ள 64 ஆயிரத்து 320 மக்கள் பயன்பெறும் வகையிலான புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அடுத்த ஆண்டு இப்பணி மேற்கொள்ளப்படும்.
கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் போலீஸ் நிலையத்தின் எல்லைகள் மிகவும் விரிவாகவும் அதிக மக்கள் தொகை கொண்டுள்ளதாகவும் உள்ளதால், தாந்தோன்றி மலையில் ஒரு புதிய போலீஸ் நிலையம் ஏற்படுத்தப்படும். கரூர் பஸ் நிலையத்திற்கு அருகில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஒரு சாலை மேம்பாலம் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப் படும்.
கரூர் நகரத்தில் கோவை ரோடு முதல் பை-பாஸ் ரவுண்டானா வரை அமைந்துள்ள கோவை சாலையில் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகிறார்கள். எனவே கரூர் நகராட்சி மூலம் கரூர் ரெயில்வே சந்திப்பு முதல் சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை வரை கரூர் நகருக்கு ஒரு புதிய அணுகு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குளித்தலை நகரில் தற்போது இருக்கும் பஸ் நிலையம் மிகவும் சிறியதாக உள்ளதால், பொதுமக்கள் சென்று வருவதற்கும், பஸ்கள் சென்று வருவதற்கும் மிகவும் சிரமமாக உள்ளதை கருத்தில் கொண்டு, புதிய பஸ் நிலையம் அமைக்க பரிசீலனை செய்யப்படும்.
கோவை-ஈரோடு தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் அதிக விபத்துகள் ஏற்படுவதால் நான்கு வழிச்சாலை பகுதியில், விபத்து பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கரூர்- ஈசநத்தம்- கூம்பூர்- வேடசந்தூர் சாலையில் தரைமட்ட பாலத்திற்கு பதிலாக உயர்மட்ட பாலம் கட்டப் படும். வைரமடைதொப்பம்பட்டி சாலையில் குறுகிய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டப்படும். செல்லிவலசு- வெண்ணெய் கோதூர் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டப்படும். மணப்பாறை-குஜிலியம்பாறை சாலையில் பாலம் கட்டப் படும். பாலவிதி-கடவூர்-அய்யலூர் சாலையில் பாலங்கள் கட்டப்படும். இனங்கூர் நல்லூர் சாலையில் பாலம் கட்டப்படும்.
கரூர் மாவட்டம் புகழூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட மீண்டும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். தொழில்நுட்ப சாத்திய கூறுகளின் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மேல் நட வடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் ரூ.3 கோடி வழங்கும்.
கரூர் மாவட்டத்தில் ரூ. 61 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 37 ஆயிரத்து 486 மடிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. கிட்டதட்ட 37 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று இருக்கிறார்கள். ரூ.12 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் 37 ஆயிரத்து 694 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25ஆயிரத்து 653 விவசாயிகளுக்கு ரூ. 15 கோடியே 7 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ரூ.87 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் ஏழை எளிய குடும்பங்களுக்கு சூரிய மின் சக்தியுடன் கூடிய 5 ஆயிரத்து 232 பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ்
ரூ.125 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் 10ஆயிரத்து 654 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் அறிவித்தார்.
விழாவில் கீதா எம்.எல்.ஏ., கிருஷ்ணராயபுரம் பேரூர் கழக செயலாளர் ஆர்.தங்கதுரை, பழைய ஜெயங்கொண்டம் பேரூர் கழக செயலாளர் ஜி.வேணுகோபால், கரூர் ரிஷி இண்டஸ்ட்ரீஸ் கே.செந்தில்குமார், குளித்தலை நகர செயலாளர் சோமு.ரவி, தோகைமலை ஆசிரியர் கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன், முன்னாள் கடவூர் ஒன்றியக்குழு தலைவர்கள் சிங்கம்பட்டி என்.செல்வராஜ், எஸ்.தேன்மொழி, கடவூர் ஒன்றிய செயலாளர் எம்.வி.கே.வீரமணி, சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் சிந்தை இஸ்மாயில், கடவூர் ஒன்றிய நிர்வாகிகள் ஆர்.கே.சுதாகர், ரவிபிரசன்னா, காகிதபுரம் பேரூர் கழக செயலாளர் வக்கீல் சதாசிவம், புஞ்சைபுகழூர் பேரூர் கழக செயலாளர் எஸ்.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.