பொது இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார்

வி.களத்தூரில் பொது இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார்

Update: 2017-10-04 22:15 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூரில் திருவிழா நடைபெறும் போதும், சாமி ஊர்வலம் மற்றும் திருமண ஊர்வலங்கள் நடை பெறும் போதும் இருதரப்பினரிடையே பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குற்ற செயல்களில் யார் ஈடுபடுகிறார்கள் என்பதனை கண்டறியும் வகையில் வி.களத்தூரில் அனைத்து தெருக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம் போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த காவல்துறையினர் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதற்கு ஒரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் பலர் இணைந்து நாங்கள் குடியிருக்கும் தெருக்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வி.களத்தூர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்