உறுப்புகள் தானம் செய்யப்பட்ட அறந்தாங்கி வாலிபரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
உறுப்புகள் தானம் செய்யப்பட்ட அறந்தாங்கி வாலிபரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் உறவினர்கள் அஞ்சலி
அறந்தாங்கி,
அறந்தாங்கி கூத்தாடிவயலை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 22). இவர் கடந்த 30-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மோதி படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தபோது மூளைச்சாவு அடைந்தார். கார்த்திகேயனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்து விமானம் மூலம் குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கார்த்திகேயனின் உடலில் இருந்த கல்லீரல், சிறுநீரகம் அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான மா.நடராஜனுக்கும், இதயம் 43 வயதுடைய தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கும், நுரையீரல் 62 வயதுடைய உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கும் பொருத்தப்பட்டது. இதையடுத்து உறுப்புகள் அகற்றப்பட்ட கார்த்திகேயனின் உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான கூத்தாடிவயலுக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து அவரது உடலுக்கு உறவினர்கள், சுற்று வட்டார பொதுமக்கள், நண்பர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து கார்த்திகேயனின் உடல் கூத்தாடிவயலில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.