‘டி.டி.வி.தினகரன் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யவில்லை’ சேலம் போலீஸ் அதிகாரி விளக்கம்
‘டி.டி.வி.தினகரன் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யவில்லை’ என்று சேலம் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் தாதகாப்பட்டி சண்முகாநகரில் கடந்த 29-ந் தேதி டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் சிலர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர். அந்த துண்டு பிரசுரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துகளும், அவதூறு பரப்பும் வகையிலும் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக நீட் தேர்வு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிரான வாசகங்களும் இடம் பெற்றிருந்தது.
அதன்பேரில் 143 (அனுமதியில்லாமல் ஒரே இடத்தில் அதிக நபர்கள் கூடுதல்), 120-பி (கூட்டு சதி), 124-ஏ (மத்திய, மாநில அரசின் முடிவுகளுக்கு எதிராக செயல்படுதல்), 153 (வன்முறை தூண்டும் வகையில் நடந்து கொள்ளுதல்), 504 (பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்), 506(2)- (மிரட்டல் விடுத்தல்), 500 (அவதூறு பரப்புதல்) ஆகிய 7 பிரிவுகளில் டி.டி.வி.தினகரன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.சி.வெங்கடாசலம், எஸ்.கே.செல்வம், கலைவாணி உள்பட 36 பேர் மீது சேலம் அன்னதானப்பட்டி போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில், தினகரன் அணியை சேர்ந்த சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.சி.வெங்கடாசலம், சூர்யா, சந்திரன், சசிக்குமார், கலைவாணி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், டி.டிவி.தினகரன் மற்றும் புகழேந்தியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, டி.டி.வி.தினகரன் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதனை சேலம் மாநகர போலீஸ் அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (என்.எஸ்.ஏ.) கீழ் தேச துரோக வழக்கு ஒருவர் மீது பதிவு செய்ய வேண்டும் என்றால் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும், இருநாடுகளுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டாலோ அல்லது பேசி இருந்தாலோ, அவர்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியும்.
இதுதவிர, அன்னிய செலவாணி மோசடி வழக்கில் ஈடுபட்டிருந்தாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம். ஆனால் தினகரன் ஆதரவாளர்கள் கொடுத்த துண்டு பிரசுரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாசகங்கள் இடம் பெற்றிருந்ததால் மத்திய, மாநில அரசுகளின் முடிவுகளுக்கு எதிராக செயல்படுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தினகரன் சம்பவ இடத்திற்கு வராததால் அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அதற்கான வாய்ப்புகளும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.