வேன் கவிழ்ந்த விபத்தில் ஆடு சாவு

வேன் கவிழ்ந்த விபத்தில் ஆடு சாவு;

Update: 2017-10-04 22:45 GMT
பேட்டை,

சுத்தமல்லி இந்திராநகரை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (வயது 38). இவர் சுத்தமல்லியில் பூக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலையில் வீட்டில் இருந்து வேனில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார்சைக்கிளில் ஒருவர் வந்தார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக, மந்திரமூர்த்தி பிரேக் பிடித்தார். இதனால் வேன் நிலைதடுமாறி, அருகே குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிக்குள் பாய்ந்து கவிழ்ந்தது. அப்போது அந்த இடத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டின் மீது வேன் விழுந்து அமுக்கியதில், ஆடு சம்பவ இடத்திலேயே செத்தது. வேனை ஓட்டிச் சென்ற மந்திரமூர்த்தி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

மேலும் செய்திகள்