நெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலி
நெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் சரசுவதி (வயது 4). இவள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி. படித்து வந்தாள்.
சரசுவதிக்கு கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் இருந்தது. அவள் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்றும், காய்ச்சல் குணமாகவில்லை. அவளுக்கு காய்ச்சல் விட்டு, விட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவளை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சரசுவதி பரிதாபமாக இறந்தாள்.
மற்றொரு சம்பவம்
தென்காசி புதுமனை 3-வது தெருவை சேர்ந்தவர் அபுல்ஹாசன் சாதலி. இவருக்கு 2 குழந்தைகள். இதில் மூத்த பெண் குழந்தையான பாத்திமாவுக்கு(3) கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து தென்காசியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பாத்திமாவை சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனாலும் காய்ச்சல் குறையவில்லை.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை பாத்திமா பரிதாபமாக இறந்தது.
மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலியான சம்பவம் அந்தந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.