புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கெட் வழங்கும் திட்டம் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை

புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த 2002–ம் ஆண்டு முதல் ராஜீவ்காந்தி சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் காலை மற்றும் மாலை வேளைகளில் பால், பிஸ்கெட் வழங்கப்பட்டு வந்தது.

Update: 2017-10-04 23:15 GMT

புதுச்சேரி,

புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த 2002–ம் ஆண்டு முதல் ராஜீவ்காந்தி சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் காலை மற்றும் மாலை வேளைகளில் பால், பிஸ்கெட் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நிதிநெருக்கடியால் கடந்த 2013–ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாலையில் பால் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் சில மாதங்களில் காலையில் பால் வழங்கும் திட்டமும் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பிஸ்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சட்டசபை வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கல்வித்துறை இயக்குனர் குமார் மற்றும் அதிகாரிகள், தனியார் கம்பெனி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஒரு மாணவருக்கு 5 பிஸ்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்