செங்கம் ஏரியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை போலீஸ் விசாரணை
செங்கம் ஏரியில் குதித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.
செங்கம்,
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காயம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி புவனேஸ்வரி (வயது 24). இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. புவனேஸ்வரி திருமணத்திற்கு முன்பே அதே கிராமத்தை சேர்ந்த ரித்தீஸ் (25) என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இதனால் சுரேஷை திருமணம் செய்து கொண்ட பிறகும் ரித்தீஸ் உடனான காதலை புவனேஸ்வரி தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற புவனேஸ்வரி அதன்பிறகு வீட்டிற்கு வரவில்லை. இதேபோல ரித்தீசும் திடீரென மாயமானார். அவர்களை உறவினர்கள் தேடிவந்தனர். இதற்கிடையே நேற்று செங்கம் ஏரியில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏரியில் மிதந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.