பி.எஸ்.என்.எல். அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல். அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2017-10-04 22:45 GMT
திருச்சி,

ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரியும், 15 சதவீத ஊதிய உயர்வு வழங்க கோரியும் அகில இந்திய பி.எஸ்.என்.எல். அலுவலர் சங்கம் சார்பில் பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல்சலாம் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் காமராஜ், தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்ட செயலாளர் பழனியப்பன் மற்றும் மோகன், கணேசன், குணசேகரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், கோரிக்கைகள் குறித்து எம்.பி.க்களிடம் மனு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 

மேலும் செய்திகள்