உத்தமபாளையம் அருகே சரக்கு வேனை ஏற்றி தொழிலாளியை கொல்ல முயற்சி டிரைவர் கைது

உத்தமபாளையத்தை அடுத்த ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் சந்திரன்.

Update: 2017-10-04 22:00 GMT

உத்தமபாளையம்,

உத்தமபாளையத்தை அடுத்த ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் அஜித்குமார் (வயது 23). சின்னஓவுலாபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முருகன் மகன் விஜய் (20). மோட்டார் சைக்கிளால் மோதியது தொடர்பாக அஜித்குமார், விஜய் ஆகியோர் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் முருகன் சின்னஓவுலாபுரம் கடைவீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சரக்குவேனை ஓட்டி வந்த அஜித்குமார், முருகன் மீது வேனை ஏற்றி அவரை கொல்ல முயன்றார். படுகாயமடைந்த முருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 இது தொடர்பான புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்