மீன்களை பராமரிக்கும் கருவி

செல்லப்பிராணிகளாக இருக்கும் மீன்களை கண்காணிக்கவும், பராமரிக்கவும் வந்துள்ளது இந்தக் கருவி.

Update: 2017-10-04 09:05 GMT
வீட்டு விலங்குகளான நாய், பூனை போன்றவற்றை கண்காணிக்க ஏராளமான கருவிகள் அறிமுகமாவிட்டன. ஆனால் மேலும் பலரின் விருப்பத்திற்குரிய செல்லப்பிராணிகளாக இருக்கும் மீன்களை கண்காணிக்கவும், பராமரிக்கவும் வந்துள்ளது இந்தக் கருவி. நாணய அளவுள்ள இந்த கருவியை மீன் பராமரிப்புத் தொட்டியில் போட்டால் கண்ணாடியை சுத்தம் செய்யும். மீன்களை கண்காணிக்கும். நீங்கள் விரும்பினால் அலுவலகத்தில் இருந்து வீடியோவில் இதை இயக்கிப் பார்க்கலாம். மீன்களை மிக நெருக்கமாக, அழகிய கோணங்களில் புகைப்படம் பிடிக்கலாம். எம்.ஓ.ஏ.ஐ. ரோபாட் நிறுவனம் இந்த கருவியை தயாரித்துள்ளது. 

மேலும் செய்திகள்