வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆண்கள் 10,78,575, பெண்கள் 11,31,112, மூன்றாம் பாலினம் 185
திருச்சி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 10 லட்சத்து 78 ஆயிரத்து 575 ஆண் வாக்காளர்களும், 11 லட்சத்து 31 ஆயிரத்து 112 பெண் வாக்காளர்களும், 185 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 22 லட்சத்து 9 ஆயிரத்து 872 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் ராஜாமணி நேற்று வெளியிட்டார். அதனை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அபிராமி பெற்றுக்கொண்டார்.
அப்போது கலெக்டர் ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
1.1.2018-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் நடைபெற உள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்டத்தில் உள்ள 2,505 வாக்குச்சாவடி மையங்களிலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியலின்படி திருச்சி மாவட்டத்தில் 10 லட்சத்து 78 ஆயிரத்து 575 ஆண் வாக்காளர்களும், 11 லட்சத்து 31 ஆயிரத்து 112 பெண் வாக்காளர்களும், 185 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 22 லட்சத்து 9 ஆயிரத்து 872 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நடைபெறவுள்ள சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது 1.1.2018 அன்று 18 வயது நிரம்பியவர்கள் (31.12.1999-ந் தேதி அல்லது அந்த தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள்) சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வயது மற்றும் இருப்பிடத்திற்குரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து புதியதாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.
வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்க படிவம் 6ஏ, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய வேண்டியிருப்பின் படிவம் 7, வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் படிவம் 8, சட்டப்பேரவை தொகுதிக்குள் இடம் பெயர்த்து புதிய இடத்தில் வசிப்பவர்கள் படிவம் 8ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும், 8.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. 7.10.2017 மற்றும் 21.10.2017 ஆகிய தேதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங் களும் நடைபெற உள்ளது. பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். இப்பணி வருகிற 31-ந்தேதி வரை நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் 5.1.2018 அன்று வெளியிடப்படும்.
அரசியல் கட்சியினரால் ஏற்கனவே வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்பட்டு அந்நியமனம் திரும்பப் பெறப்படாத வரை அவரே அக்கட்சியின் வாக்குச்சாவடி நிலை முகவராக செயல்படலாம். எனவே கட்சியால் ஏற்கனவே வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்பட்டு அந்நியமனம் திரும்பப் பெறாத பாகங்களுக்கு புதிய வாக்குச்சாவடி நிலை முகவர் நியமனம் ஏதும் தேவையில்லை. நடைபெற உள்ள சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் போது வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 விண்ணப்பங்களையும் இத்திருத்த காலம் முழுமைக்கும் அதிகபட்சம் 30 விண்ணப்பங் களையும் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.