நெல்லையில் பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி மற்றொருவர் படுகாயம்
நெல்லையில் அரசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் பலியானார்கள். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
நெல்லை,
நெல்லை சந்திப்பு உடையார்பட்டி வாழவந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உச்சிமாகாளி. அவருடைய மகன் பிரகாஷ் (வயது27). இவர் நெல்லையில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.
இவரும், இவருடைய நண்பர்களான வண்ணார்பேட்டை காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜாராம் (25), தினேஷ் (28) ஆகிய 3 பேரும் நேற்று இரவில் ஒரு மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டையில் இருந்து உடையார்பட்டிக்கு வந்து கொண்டு இருந்தனர். நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பை-பாஸ் சாலையில் வந்தபோது, அந்த வழியாக மதுரையில் இருந்து நெல்லைக்கு வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். சிறிது நேரத்தில் பிரகாஷ் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜாராம், தினேஷ் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜாராம் நள்ளிரவில் உயிரிழந்தார்.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பக்கீரிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாளையங்கோட்டை ஆரோக்கியநாதபுரம் அருகில் மெஞ்ஞானபுரத்தில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு நெல்லைக்கு வந்த லாரி ரோட்டில் கவிழ்ந்தது. இந்த லாரிக்கு எதிரே வந்த காரும் நிலைதடுமாறி அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கார் டிரைவர் மூக்குபீறியை சேர்ந்த கணேசன் காயம் அடைந்தார்.
இந்த விபத்து நடந்த நேரத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தாதன்குளத்தை சேர்ந்த கிங்ஸ்லி மோசஸ், கவிழ்ந்து கிடந்த லாரி மீது மோதினார். இதில் அவரும் காயம் அடைந்தார். காயம் அடைந்த கிங்ஸ்லி மோசஸ், கணேசன் ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்கறி லாரி கவிழ்ந்து கிடந்ததால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.