தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 14 லட்சம் பேர் ஆண்களை விட பெண்கள் அதிகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 12 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட 22 ஆயிரத்து 705 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
தூத்துக்குடி,
வருகிற 1-1-18 அன்று தகுதி நாளாக கொண்டு வாக்காளர்பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதனை அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், கலெக்டர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 95 ஆயிரத்து 93 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 17 ஆயிரத்து 798 பெண் வாக்காளர்கள், 88 திருநங்கைகள் ஆக மொத்தம் 14 லட்சத்து 12 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர்.
விளாத்திகுளம் தொகுதியில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 774 வாக்காளர்களும், தூத்துக்குடி தொகுதியில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 676 வாக்காளர்களும், திருச்செந்தூர் தொகுதியில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 552 வாக்காளர்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 771 வாக்காளர்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 849 வாக்காளர்களும், கோவில்பட்டி தொகுதியில் 2 லட்சத்து 53 அயிரத்து 357 வாக்காளர்களும் உள்ளனர்.
வருகிற 1-1-18 அன்று 18 வயது பூர்த்தி அடையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். வருகிற 31-ந் தேதி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் 8-10-17, 22-10-17 ஆகிய நாட்களில் வாக்காளர் சிறப்பு முகாமும் நடக்கிறது. இதில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம். பெயர் திருத்தம், நீக்கம் செய்யவும் உரிய படிவங்களை சமர்ப்பிக்கலாம். el-e-ct-i-ons.tn.gov.in மற்றும் www.nvsp.in ஆகிய இணையதள முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு உள்ள வாக்காளர்களுக்கான புகைப்பட அடையாள அட்டையை தேசிய வாக்காளர் தினமான 25-01-18 அன்று பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உதவி கலெக்டர் அனிதா வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 7 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 337 பெண் வாக்காளர்களும், 13 திருநங்கை வாக்காளர்களும், மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 357 வாக்காளர்களும் உள்ளனர்.
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 663 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 7 ஆயிரத்து 109 பெண் வாக்காளர்களும், 2 திருநங்கை வாக்காளர்களும், மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 774 வாக்காளர்களும் உள்ளனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 373 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 15 ஆயிரத்து 456 பெண் வாக்காளர்களும், 20 திருநங்கை வாக்காளர்களும், மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 849 வாக்காளர்களும் உள்ளனர். தாசில்தார்கள் ஜான்சன் தேவசகாயம் (கோவில்பட்டி), செல்வகுமார் (விளாத்திகுளம்), நம்பிராயர் (ஓட்டப்பிடாரம்), முருகானந்தம் (கயத்தாறு), சூரியகலா (எட்டயபுரம்) மற்றும் பலர் உடன் இருந்தனர்.
திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் கணேஷ்குமார் வெளியிட்டார். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 280 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 18 ஆயிரத்து 258 பெண் வாக்காளர்களும், 14 திருநங்கை வாக்காளர்களும், மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 552 வாக்காளர்களும் உள்ளனர். தாசில்தார் அழகர், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தூர்ராஜன், தேர்தல் துணை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.