தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருமாறு ‘தேவேந்திர பட்னாவிஸ் எனக்கு அழைப்பு விடுத்தார்’ நாராயண் ரானே பேட்டி

தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருமாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனக்கு அழைப்பு விடுத்ததாக நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.

Update: 2017-10-03 23:45 GMT
மும்பை,

காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானே, ‘மராட்டிய சுவாபிமான் பக்‌ஷ்’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில், நேற்று மும்பையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை அவர் சந்தித்து பேசினார்.

அதன்பின்னர், நிருபர்களை சந்தித்த நாராயண் ரானே, “பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருமாறு தேவேந்திர பட்னாவிஸ் எனக்கு அழைப்பு விடுத்தார். இதன் மீது முடிவு எடுக்க 2 நாட்கள் அவகாசம் அளிக்குமாறு அவரிடம் கேட்டேன்” என்றார்.

65 வயதான நாராயண் ரானே, சிவசேனா கட்சியின் மூலம் அரசியல் வாழ்வை தொடங்கியவர். அக்கட்சி சார்பில் முதல்-மந்திரியாகவும் பதவி வகித்திருக்கிறார். இந்நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரசில் ஐக்கியம் ஆனார்.

பின்னர், காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவானுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தற்போது தனிக்கட்சி ஆரம்பித்து இருக்கிறார். நாராயண் ரானே பா.ஜனதா கூட்டணியில் சேருவதற்கு தொடக்கம் முதலே சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்