150 நாள் பரோலில் இருந்த சஞ்சய் தத்
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.
மும்பை,
இது தொடர்பான வழக்கில், சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர், பிரபல நடிகர் சஞ்சய் தத் (வயது 58).
அவருக்கு இந்த வழக்கில் மும்பை தடா கோர்ட்டு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதை சுப்ரீம் கோர்ட்டு 5 ஆண்டுகளாக குறைத்தது. அதைத் தொடர்ந்து அவர் சிறை வாசம் அனுபவித்தார்.
ஆனால் அவர் தண்டனை கைதியாக சிறையில் இருந்தபோது மனைவி மான்யதா தத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை, மகளின் மூக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல காரணங்களை சொல்லி பல முறை பரோலில் வெளியே வந்தார். அவர் அடிக்கடி பரோலில் விடுதலையாகி வந்தது ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மொத்தத்தில் அவர் தனது தண்டனைக்காலத்தில் கிட்டத்தட்ட 150 நாட்கள் பரோலில் வெளியே இருந்தார். இது அப்போது பெருத்த சர்ச்சைகளை கிளப்பியது.
அவர் நடிகர் என்பதாலும், செல்வாக்கு மிக்க நபர் என்பதாலும், மிக முக்கிய நபராக கருதப்பட்டு பரோலில் விடப்படுவதாக கூறப்பட்டது.
அவர் 30 நாட்கள் பரோலில் வந்து, பின்னர் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்ட சம்பவம் எல்லாம் நடந்துள்ளது. அது மட்டுமின்றி அவர் தண்டனை காலம் முடிவதற்கு 8 மாதங்கள் முன்பாகவே நன்னடத்தை என்ற பெயரால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதுவும் சர்ச்சையை கிளப்பியது.