திருவள்ளூர் மாவட்டத்தில் 33 லட்சத்து 2 ஆயிரத்து 675 வாக்காளர்கள் கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 33 லட்சத்து 2 ஆயிரத்து 675 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.;

Update: 2017-10-03 23:30 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சுந்தரவல்லி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய 10 சட்டமன்ற தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல், வாக்காளர் பதிவு அலுவலர்களான பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், அம்பத்தூர், திருவொற்றியூர் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்கள் என நிர்ணயிக்கப்பட்ட இடங்களான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 1,135 பள்ளிகளிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலானது ஒவ்வொரு பாகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் உள்ளது. விருப்பப்படும் பொதுமக்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு பெயர் சேர்த்தல் நீக்கம், திருத்தம், இடமாற்றம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:–

கும்மிடிப்பூண்டி தொகுதியில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 104 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 36 ஆயிரத்து 781 பெண் வாக்காளர்கள், இதரர் 33 என மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 918 வாக்காளர்கள் உள்ளனர்.

பொன்னேரி(தனி) தொகுதியில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 431 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 30 ஆயிரத்து 384 பெண் வாக்காளர்கள், இதரர் 59 பேர் என மொத்தம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 874 வாக்காளர்கள் உள்ளனர். திருத்தணி தொகுதியில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 177 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 42 ஆயிரத்து 552 பெண் வாக்காளர்கள், இதரர் 29 பேர் என மொத்தம் 2 லட்சத்து 79 ஆயிரத்து 758 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவள்ளூர் தொகுதியில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 263 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 35 ஆயிரத்து 20 பெண் வாக்காளர்கள், இதரர் 25 என்று மொத்தம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 308 வாக்காளர்கள் உள்ளனர். பூந்தமல்லி(தனி) தொகுதியில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 387 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 66 ஆயிரத்து 556 பெண் வாக்காளர்கள், இதரர் 52 பேர் என்று மொத்தம் 3 லட்சத்து 29 ஆயிரத்து 995 வாக்காளர்கள் உள்ளனர். ஆவடி தொகுதியில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 825 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 5 ஆயிரத்து 430 பெண் வாக்காளர்கள், இதரர் 89 பேர் என மொத்தம் 4 லட்சத்து 11 ஆயிரத்து 344 வாக்காளர்கள் உள்ளனர். மதுரவாயல் தொகுதியில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 298 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 4 ஆயிரத்து 618 பெண் வாக்காளர்கள், இதரர் 130 பேர் என மொத்தம் 4 லட்சத்து 15 ஆயிரத்து 46 வாக்காளர்கள் உள்ளனர்.

அம்பத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 225 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 84 ஆயிரத்து 202 பெண் வாக்காளர்கள், இதரர் 102 பேர் என மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரத்து 529 வாக்காளர்கள் உள்ளனர். மாதவரம் தொகுதியில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 154 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 7 ஆயிரத்து 105 பெண் வாக்காளர்கள், இதரர் 90 பேர் என்று மொத்தம் 4 லட்சத்து 14 ஆயிரத்து 349 வாக்காளர்கள் உள்ளனர். திருவொற்றியூர் தொகுதியில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 450 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 47 ஆயிரத்து 993 பெண் வாக்காளர்கள், இதரர் 111 பேர் என்று மொத்தம் 2 லட்சத்து 93 ஆயிரத்து 554 வாக்காளர்கள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 16 லட்சத்து 41 ஆயிரத்து 314 ஆண் வாக்காளர்கள், 16 லட்சத்து 60 ஆயிரத்து 641 பெண் வாக்காளர்கள், இதரர் 720 பேர் என்று மொத்தம் 33 லட்சத்து 2 ஆயிரத்து 675 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மணிலா, சிறப்பு தாசில்தார் லட்சுமி, உதவியாளர் வெங்கடேசன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்