பொழிச்சலூர் அருகே ‘வார்தா’ புயலால் சேதம் அடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை

பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் இருந்து கொளப்பாக்கம் செல்லும் சாலையில் அடையாறு ஆற்றில் கவுல்பஜார் தரைப்பாலம் உள்ளது.

Update: 2017-10-03 22:45 GMT

தாம்பரம்,

கொளப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் வந்து செல்லும் மாணவ–மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் இந்த பாலத்தைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த பாலம் நீரில் மூழ்கி விடுவதால் போக்குவரத்து நிறுத்தப்படும்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட ‘வார்தா’ புயலின் காரணமாக இந்த தரைப்பாலம் பெரும்பாலும் சேதமடைந்தது. இதனால் அந்த பகுதியில் தற்காலிகமாக மண் கொட்டி வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையினால் தரைப்பாலத்தில் மண் கலவை கொட்டப்பட்ட இடம் அடித்துச்செல்லப்பட்டு பாலத்தை முழுமையாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக மோசமான நிலையில் உள்ள தரைப்பாலத்தை அகற்றிவிட்டு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்