திருவொற்றியூரில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு
திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் நரேஷ் (வயது 25). தனியார் மோட்டார் சைக்கிள் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
திருவொற்றியூர்,
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நவீன் (17) என்பவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதன்பின்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற நரேஷ் பின்பு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள ஒரு ஆலமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் நரேஷ் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருவொற்றியூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து நரேஷ் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாராவது அவரை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.