பாளையங்கோட்டையில் சாக்கடை கால்வாயை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தூர்வாரினார்
நெல்லைக்கு நேற்று வந்திருந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை,
காந்தி பிறந்த நாளில் அவரது படத்துக்கு மாலை அணிவிப்பது மட்டும் சடங்காக செய்யக்கூடாது. அவரது தூய்மை திட்டத்தை உணர்வு பூர்வமாக இந்தியா முழுவதும் பரப்புவதற்கு கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கினார். நாடு, நகரம், தெரு அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற காந்தியின் எண்ணத்தை பிரதமர் செயல்படுத்தி வருகிறார்.
இந்த திட்டத்தின் மூலம் திறந்த வெளி கழிப்பிடங்கள் அதிகமாக இருந்த மாநிலங்களில் ஏராளமான இலவச கழிப்பிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்தியாவில் 2014-ம் ஆண்டுக்கு முன்பு 38 சதவீத வீடுகளில் மட்டுமே கழிவறைகள் இருந்தன. 3 ஆண்டுகளை கடந்து தற்போது 79 சதவீத வீடுகளில் கழிவறைகள் உள்ளன.
தமிழ்நாட்டில் முன்பு 47 லட்சம் வீடுகளில் கழிவறை இருந்தன. கடந்த 3 ஆண்டுகளில் 25 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளன. அதாவது தனிநபர் இல்ல கழிவறை உள்ள வீடுகள் 72 லட்சமாக உயர்ந்துள்ளன. இதுதவிர தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளன. தூய்மை இந்தியா திட்டம் மூலம் காவிரி, தாமிரபரணி ஆகிய நதிகள் சுத்தமாக்கப்படுகின்றன. இந்த நதிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் திட்டமிடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பாரதீய ஜனதா கட்சி சார்பில் தூய்மை பணி பாளையங்கோட்டை 15-வது வார்டு மனகாவலம்பிள்ளை நகரில் நேற்று நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சாக்கடை கால்வாயை தூர்வாரி பணியை தொடங்கி வைத்தார். மேலும் இலவச மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சேகர், நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.