மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியர் உடல் கருகி சாவு மின்மாற்றியில் ஏறியபோது பரிதாபம்
திருப்பூரில் புதிய மின் கம்பம் அமைக்கும் பணிக் காக மின்மாற்றியில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியர் உடல் கருகி பலியானார்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சேவூர் மங்கரசு வலையபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவருக்கு திருமணமாகி அம்பிகா என்ற மனைவியும், மித்ரா (6) என்ற மகளும் உள்ளனர். திருப்பூர் அனுப்பர்பாளையம் மின் வாரிய அலுவலக கட்டுப் பாட்டின் கீழ் சுரேஷ் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் சிறுபூலுவப்பட்டியை அடுத்த ரங்கநாதபுரம் பகுதி யில் புதிய மின்கம்பம் அமைக் கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்காக சுரேஷ் அந்த பகுதியில் உள்ள ஒரு மின்மாற்றியில் ஏறினார். அப்போது அங்குள்ள 3 சுவிட்சுகளில் 1 மட்டும் அணைக்காமல் இருந்ததாக தெரிகிறது.
இதை அறியாமல் மின் மாற்றியில் ஏறிய சுரேஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார். மேலும் அவர் உடல் மின்மாற்றியிலேயே தொங்கிக்கொண்டிருந்தது.
இதை பார்த்த அந்தப்பகுதி பொதுமக்கள் உடனடியாக 15வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் மின்மாற்றியில் தொங்கிக்கொண்டிருந்த சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போலீ சார் வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் செய்ததாக தெரிகி றது.
இதனால் சுரேஷ் உடலை பிரேத பரிசோதனை செய்வதி லும் தாமதம் ஏற்பட்டதால் அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நீண்ட நேரமாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் காத்திருந்தனர்.
திருப்பூரில் மின்மாற்றியில் ஏறியபோது ஒப்பந்த ஊழியர் உடல் கருகி பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.