சேலம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை உள்பட மேலும் 5 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை உள்பட மேலும் 5 பேர் பலியானார்கள். தொடரும் சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகரம், ஓமலூர், காடையாம்பட்டி, ஜலகண்டாபுரம், எடப்பாடி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 25-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.
சேலம் மரவனேரியை சேர்ந்த 13 வயது மாணவர் ஸ்ரீதர், பொட்டியபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஷாசினி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி அகல்யா ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இந்த நிலையில் நேற்று டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை உள்பட மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
சேலம் களரம்பட்டி பாரதியார் தெருவை சேர்ந்தவர் முகமது மொய்தீன். இவரது 9 வயது மகள் ஆயிஷா. இவள் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 28-ந் தேதி கடுமையான காய்ச்சல் கண்டு, சிறுமி ஆயிஷா சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள். டாக்டர்கள், அச்சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஆயிஷா உயிரிழந்தாள்.
எடப்பாடியை அடுத்த அங்காளம்மன் கோவில் பகுதியை சேர்ந்வர் ஆனந்தன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி பானுமதி. இத்தம்பதியின் மகன் பழனிவேலாயுதம் (12). இவன், குஞ்சாம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த வாரம் பழனிவேலாயுதம் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று 29-ந்தேதி வீடு திரும்பினான். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று பழனிவேலாயுதம் உயிரிழந்தான்.
மேச்சேரி அருகே உள்ள அரங்கனூரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது 3 வயது குழந்தை சத்யஸ்ரீ. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு குழந்தை சத்யஸ்ரீ உயிரிழந்தாள்.
கொங்கணாபுரம் அருகே உள்ள தடையம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (30). கல் உடைக்கும் தொழிலாளி. இவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. பின்னர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று மர்ம காய்ச்சல் மீண்டும் தீவிரம் அடைந்து அவர் உயிரிழந்தார்.
அதே கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிலைகாரர் என்கிற வெங்கடாஜலம் (65). தொடர்ந்து மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், கொங்கணாபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்தார். ஆனால், காய்ச்சல் குணமாகவில்லை. இந்த நிலையில் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வந்த வெங்கடாஜலம் நேற்று காலை உயிரிழந்தார். ஒரே கிராமத்தில் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.