மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி கிறிஸ்தவ வன்னியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி கிறிஸ்தவ வன்னியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்;
திண்டுக்கல்,
கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் இயக்கம் சார்பில், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் நிக்கோலஸ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதைத்தொடர்ந்து, மேட்டுப்பட்டி பாஸ்கா திடலில் இருந்து சிறுநாயக்கன்பட்டி, இரண்டெலப்பாறை வழியாக கொசவபட்டி வரை பிரசார பயணம் நடத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு கிறிஸ்தவ வன்னியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜெயசுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.