கன்னியாகுமரியில் காந்தி, காமராஜர் நினைவு மண்டபங்களில் கலெக்டர், அரசியல் கட்சியினர் மரியாதை

காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் உள்ள நினைவு மண்டபங்களில் கலெக்டர் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2017-10-02 22:45 GMT
கன்னியாகுமரி,

காந்தி ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதுபோல் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி நினைவு மண்டபம், மற்றும் காமராஜர் மணிமண்டபம் ஆகியவற்றில் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் தலைமையில், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் காந்தியின் அஸ்தி கட்டத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதுபோல், காமராஜரின் மணி மண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், விஜயகுமார் எம்.பி., மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாடசாமி சுந்தர்ராஜ், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. ஜானகி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அருள்அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு விஜயகுமார் எம்.பி. தலைமை தாங்கினார். அரசு வக்கீல் ஞானசேகர், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சந்தையடி பாலகிருஷ்ணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கனகராஜ், மீனவர் கூட்டுறவு இணையம் தலைவர் சகாயம், ஒன்றிய அவைத்தலைவர் தம்பிதங்கம், கன்னியாகுமரி பேரூர் செயலாளர் வின்ஸ்டன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன் தலைமையில் மாவட்ட செயலாளர் வடலிவிளை மகாலிங்கம், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் அமைப்பாளர் குமரி முருகேசன், மாவட்ட துணைத்தலைவர் ராஜதுரை உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் மாநில தலைவர் முகமது இஸ்மாயில் தலைமையில் மாவட்ட தலைவர் வக்கீல் அருள்ராஜ், அகஸ்தீஸ்வரம் வட்டார தலைவர் தியாகராஜன், வக்கீல் பிரிவு தலைவர் சர்ச்சில், செயலாளர் டேவிட் முத்துராஜ் உள்பட  பலர் கலந்து கொண்டு காந்தி மண்டபத்திலும், காமராஜர் மணி மணிமண்டபத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் ஓ.பி.எஸ். பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் ஆன்றோ அலெக்ஸ் தலைமையில் நாகர்கோவில் நகர தலைவர் சிவகுமார், மாவட்ட செயலாளர் குமாரசாமி, அகஸ்தீஸ்வரம் வட்டார தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

காந்திய மக்கள் இயக்கம் சார்பில் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கதிரேசன் தலைமையில் ஆகாஷ்தேவ், ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். வ.உ.சி. தேசிய பேரவை சார்பில் கே.முத்துகருப்பன் தலைமையில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்