நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் கூட்டம் அலைமோதியது
4 நாட்கள் தொடர் விடுமுறை முடிவடைந்ததையொட்டி நேற்று நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவில்,
சரஸ்வதி பூஜை மற்றும் காந்தி ஜெயந்தி ஆகியவை அடுத்தடுத்த நாட்களில் வந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை (நேற்று) வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்களது ஊர்களுக்கு சிரமம் இன்றி சென்று வர வசதியாக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த நிலையில் சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள் விடுமுறை முடிவடைந்ததையொட்டி மீண்டும் தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்வதற்காக நேற்று சிறப்பு பஸ்கள் விடப்பட்டது. அதன்படி அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னைக்கு 10 பஸ்களும், பெங்களூரு மற்றும் கோவைக்கு தலா 3 பஸ்களும், வேளாங்கண்ணிக்கு ஒரு பஸ்சும் என மொத்தம் 17 பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன.
இதுபோல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னைக்கு 50 பஸ்களும், கோவைக்கு 20 பஸ்களும், மதுரைக்கு 25 பஸ்களும் என மொத்தம் 95 பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் அனைத்தும் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதியத்திற்கு மேல் புறப்பட்டன. இதனால் வடசேரி பஸ் நிலையத்தில் அதிகமான கூட்டம் இருந்தது. மேலும், ஒவ்வொரு சிறப்பு பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அனைவரும் முண்டி அடித்துக்கொண்டு பஸ்களில் ஏறினர்.
இது ஒருபுறம் இருக்க ரெயில் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரெயில்களில் முன்பதிவு அல்லாத பெட்டிகளில் பயணம் செய்வதற்காக ஏராளமான பயணிகள் ரெயில் நிலையங்களில் காத்திருந்தனர்.