காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் அமைச்சர் தகவல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வருகிறார் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
மேட்டூர்,
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்த பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், இன்று (நேற்று) மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. முன்னதாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இரவு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்படும். விவசாயிகளுக்கு தேவையான உரம், விதை கையிருப்பில் உள்ளது. விவசாயிகளுக்கு வேண்டிய கடன் வசதிகள் வங்கியின் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் 20-ந் தேதி முதல் பருவமழை தீவிரம் அடையும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மழை வேண்டிய அளவு பெய்தால் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்படும். அப்படி இல்லையெனில் விவசாயிகள் முறை வைத்து சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.
கடந்த 3 மாதங்களில் மேட்டூர் அணை பகுதியில் இருந்து 2 லட்சத்து 9 ஆயிரத்து 387 கனமீட்டர் வண்டல்மண் எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் இருந்த வண்டல் மண் எடுத்து விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இது இயற்கை உரமாகும். ஆகவே, இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கும் போதெல்லாம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.