ஆனைமலை அருகே விபத்து லாரியின் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்தது

ஆனைமலை அருகே மரத்தூள் பாரம் ஏற்றி வந்த லாரியின் டயர் வெடித்ததால் நடுரோட்டில் கவிழ்ந்தது.;

Update: 2017-10-02 22:45 GMT
ஆனைமலை,

கேரள மாநிலம் ஆலத்தூரிவிருந்து 8 டன் மரத்துள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மடத்துக்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆலத்தூரைச் சேர்ந்தடிரைவர் ரமேஷ் (வயது32) லாரியைஓட்டி வந்தார். பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் ஆனைமலை அருகே லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென லாரியின் பின்டயர் வெடித்தது.

இதனையடுத்து லாரி டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது.

காயமின்றி உயிர்தப்பினர்

இந்த விபத்தில் டிரைவர் ரமேஷ்,கிளனர் பிரதீப் (32) ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர். லாரியிலிருந்த மூட்டைகள் சாலையில் விழுந்ததினால் போக்குவரத்து தடைபட்டது.

இந்த சம்பவம் குறித்துபொதுமக்கள் மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியிலிருந்த போலீசாருக்குத் தகவல்கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சாலை முழுவதும் கொட்டிகிடந்த மூட்டைகளை பொதுமக்கள் உதவியுடன் அகற்றும் பணியில்ஈடுபட்டனர்.

சாலையில் கவிழ்ந்த லாரியையும் கயிறு கட்டி அகற்ற போலீசார் ஏற்பாடு செய்தனர். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்