அரசியல் கட்சிகள் சார்பில் காந்தி, காமராஜர் உருவப்படங்களுக்கு மரியாதை

கோவையில் அரசியல் கட்சிகள் சார்பில் காந்தி, காமராஜர் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.;

Update: 2017-10-02 22:45 GMT
கோவை,

கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி பிறந்த நாள் விழா, காமராஜர் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காந்தி மற்றும் காமராஜர் உருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். பின்னர் அவர், காந்தி, காமராஜர் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தார்.

இதில், வீனஸ்மணி, கே.எஸ்.மகேஷ்குமார், கே.பி.எஸ்.மணி, கோவை செல்வன், சவுந்திரகுமார், கணபதி சிவக்குமார், கே.ஏ.கருப்பசாமி, ராமநாகராஜ், வக்கீல் கருப்பசாமி, துளசிராஜ், காந்தகுமார், பட்டம்மாள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கோவை ஆடீஸ்வீதியில் உள்ள மூப்பனார் பவனில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா, காமராஜர் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கட்சி அலுவலகத்தில் வைக் கப்பட்டிருந்த காந்தி, காமராஜர் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப் பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர்கள் வி.வி.வாசன், கே.என்.ஜவஹர், அன்னூர் ராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். குனியமுத்தூர் ஆறுமுகம், ராஜ்குமார், தம்பு, கே.என்.எல்.ஓ. துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கணபதி செல்வம், ஆடிட்டர் நாகராஜ், ஆனந்தகுமார், மோகன்பாபு, லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குனியமுத்தூர் பகுதி த.மா.கா. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பகுதி தலைவர் குனிசை ரவிச்சந்திரன் தலைமை தாங்கி காந்தி, காமராஜர் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்தார். இதில் குனியமுத்தூர் ஆறுமுகம், மோகனாம்பாள், பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், காந்தி, சிவாஜி, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் பிறந்த நாள் விழவும், காமராஜர் நினைவு நாளும் கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் உருவப்படங்கள் மற்றும் நஞ்சுண்டாபுரம் தியாகி என்.ஆர்.கொண்டசாமி நாடார் சிலைக்கு மதசார்பற்ற ஜனதா தளம் மாவட்டத் தலைவர் என்.கே.அசோக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையொட்டி 43-வது ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட்டது. டிவிசன் தலைவர் சி.ஆறுமுகம் தலைமையில் அசோக்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில், டிவிசன் துணை தலை வர்கள் மாரப்ப உடையார், கந்தசாமி உடையார், காளிமுத்து நாடார், தியாகராஜன் உள்பட ஏராளமானவர் கள் கலந்து கொண்டனர்.

அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில் கோவை புலியகுளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், காந்தி, காமராஜர் உருவ படங்களுக்கு சி.எம்.ஸ்டீபன் ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த டாக்டர் மாணிக்கம் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

கோவையில் உள்ள அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். துணைவேந்தர் பிரேமாவதி முன்னிலை வகித்தார். மாணவிகள் பேரவைத்தலைவர் டி.காயத்ரி வரவேற்றார்.

இதில், அவினாசிலிங்கம் கல்வி நிறுவனங்களின் மூத்த அறங்காவலர் கே.குழந்தைவேலு மற்றும் பல்கலைக்கழக பேராசியைகள் மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் எஸ்.ராஜலட்சுமி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்