அரிசி மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

அரிசி மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி வணிகர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-10-02 23:00 GMT
திருவிடைமருதூர்,

கும்பகோணம் வர்த்தகர் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தமிழ்நாடு நெல்-அரிசி வியாபாரிகள், நவீன அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரிசி மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி நேற்று கும்பகோணம் காந்திபூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வர்த்தகர் சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைத்தலைவர் செல்வராஜ், வர்த்தகர் சங்க பொதுச்செயலாளர் ரமேஷ், பொருளாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இணையதள வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும், அரிசி மீதான ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நரம்பியல்பிரிவு, இதயசிகிச்சை பிரிவுகளில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும், மகாமக குளம், பொற்றாமரை குளத்தில் பக்தர்கள் புனித நீராட வசதியாக எப்போதும் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கும்பகோணம் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

மேலும் செய்திகள்