டெல்டா பாசனத்திற்கு கல்லணை எப்போது திறக்கப்படும்? வைத்திலிங்கம் எம்.பி. பதில்

டெல்டா பாசனத்திற்கு கல்லணை எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு வைத்திலிங்கம் எம்.பி. பதில் அளித்தார்.;

Update:2017-10-03 04:15 IST
தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து பாசனத்திற்கு எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்பதை முதல்-அமைச்சர் அறிவிப்பார். மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இருப்பு, அணைக்கு வரும் தண்ணீர் அளவு ஆகியவற்றை கணக்கிட்டு முறைபாசனம் அமல்படுத்த வேண்டுமா? வேண்டாமா? என பொதுப்பணித்துறையினர் அறிக்கை தாக்கல் செய்வார்கள். அதன்படி தமிழகஅரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

குறைந்த அளவு தண்ணீரில் அதிக மகசூல் பெறும் யுக்திகள் குறித்து வேளாண்மைத்துறையினர் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சம்பா தொகுப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குவது குறித்து முதல்-அமைச்சர் பரிசீலனை செய்வார். இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு விவசாயியும் விடுபடாமல் அனைவருக்கும் மானியம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தஞ்சை ராஜராஜன் வணிக வளாகத்தில் காந்தி பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு வைத்திலிங்கம் எம்.பி. மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் பாரதிமோகன் எம்.பி., கலெக்டர் அண்ணாதுரை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்